புதன், ஜூலை 29, 2015

DSINGNATON COMMITEE



பெயர்  மாற்றம் செய்திட நீண்ட  காலம்  நிரவாகத்திடம்  பேசி  பேசி  பெறப்பட்டுள்ளது. வேலை நிறுத்தக்  கோரிக்கை 30 லில்  ஒன்று  ஆகும்.
தீர்வு  பெற்று தந்த  அ  இ  சங்கத்திற்கு  நன்றி 

DESIGNATION COMMITEE CLICK HERE

செவ்வாய், ஜூலை 28, 2015

Designation Committee Meeting

Designation Committee Meeting : Designation Committee met today.  Consensus reached on New Designations.

1) Regular Mazdoor - Telecom Assistant.    

 2) Telecom Mechanic - Telecom Technician

3) TTA - Junior Engineer.  
 
4) Sr.TOA (NE11 & NE12 ) - Office Superintendent. 


5) Other Sr.TOAs - Office Associate.

ABDUL KALAM



இளமையைத் துறந்தவர் 
முதுமையை மறந்தவர் 

இந்தியாவை  நேசித்தவர் 
இளைஞர்களை சுவாசித்தவர் 

அணுசக்தி ஏற்றியவர் 
மனிதசக்தி போற்றியவர் 

எளிமையைத் தூண்டியவர் 
வலிமையை வேண்டியவர் 

அடக்கம் நிறைந்த மாணவர்  
அறிவு பெருக்கிய ஆசிரியர் 

2020 என தூக்கத்திலும் கனவு கண்டார் 
2015ல் மீளாத்  துயில் கொண்டார்

இராமேஸ்வரத்தின் அன்பு மகன் 
இந்தியத்தாயின் மூத்த மகன் 
 
அண்ணலுக்குப்பின்
நாம் கண்ட நாயகம் 

அப்துல்கலாம் 

புகழ் ஓங்குக.. 

வியாழன், ஜூலை 09, 2015

ஜூலை 8 தர்மபுரி விழா

9-7-15 ஜூலை 8 தர்மபுரி விழா: தர்மபுரியின் சிறந்த  தலைவர் தோழர்

 முனியனின் பணிசிறப்பு பாராட்டுவிழா தோழர் விமலா 

தலைமையில் திரளான தோழர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. 

அனைத்து சங்கதலைவர்களும் தோழர்களும்,நமது இயக்க அனைத்து 

தலைவர்களும் பாராட்டி உரையாற்றினர்.


பிற்பகல் நிகழ்வாக மாநில சங்க சார்பில் சிந்தனை பகிர்வு சிறப்பு 

அரங்கம் அதற்கே உரிய தோழர்களின் அமர்வுடன் நடந்தேறியது. 

தோழர் லட்சம் தலைமையில் தோழர்கள் மணிநடராஜன் 

வரவேற்புரையாற்றினர். தோழர் சேது அமர்வை துவக்கி வைத்தார். 

தோழர்கள் இந்திரஜித்ஜெயராமன்ஜெயபால் பாவேந்தர் 

குறித்தும்தோழர்கள் தமிழ்மணிகாமராஜ் பாபசாகேப் அம்பேத்கார் 

குறித்தும்தோழர் அசோகராஜன் WFTU வரலாற்று தேவை குறித்தும் 

கருத்து செறிந்த உரை தந்தனர். முன்னதாக தஞ்சை தோழர் 

பெருங்கவி இக்பால் தலைமையில் நடந்த கவிப்பொழிவில் கவி 

சீனிவாசன்இளஞ்சிட்டுக்கள் பாலு,விஜய் தமிழ் பெய்தனர். விழாவின் 

அவசியம் குறித்தும் அம்பேத்கார்பாரதிதாசன் மேன்மை 

குறித்தும்  WFTUவில் தனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவம் குறித்தும் 

தோழர் ஆர் கே நிறைவுரை செய்து இருந்த தோழர்களை 

உற்சாகப்படுத்தினார். தோழர் முரளி நன்றி பாராட்டினார். பொருட் 

செலவை சிரமமாக கருதாது சிறக்க ஏற்பாடுகளை தோழர்கள் 

மணிமுனியன் மற்றும் தர்மபுரி தோழர்கள் செய்து புதிய வரலாற்று 

பக்கம் ஒன்றை நமக்கு சேர்த்துள்ளனர். மாவட்டங்களிலிருந்து 


பங்கேற்ற தலைவர்கள், தோழர்களுக்கு நன்றி ! வாழ்க !

திங்கள், ஜூலை 06, 2015

JTO போட்டி தேர்வு

JTO  போட்டி தேர்வு 
JTO  போட்டி தேர்வுக்கான  காலியிடங்கள்  உருவாக்கம்  குறித்த  கார்போரேட்  அலுவலக உத்திரவு  அடிப்படையில்  வருட தோறும்  உருவாக்கபட்ட JTO பதவிகள்  எண்ணிக்கையை  தகவல் உரிமை சட்டப்படி  மாநிலசங்க  ஆலோசனைப்படி கோரி  மனு செய்துள்ளோம் .