புதன், ஜனவரி 08, 2014

OLIKKATHIR PONVIZHA 06-01-2014


 


 

 


 























QUPTHA -DEATH ANNIVERSARY

















கடலூர் ஒலிக்கதிர் பொன் விழா 06/01/2014

கடலூர் ஒலிக்கதிர் பொன் விழா 06/01/2014 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.50 ஆண்டு ஒலிக்கதிரின் வழிதடத்தை,ஒலிக்கதிரின் சிந்தனையை, மாண்பை விளக்கும் பல வண்ண தட்டிகள்,அதன் வரிகள் காலத்தை தாண்டி மனதை வருடும். அழகு மிளிர,கொள்ளை கொள்ளும் ஏற்பாடுகள், மாவட்டத்தில் எல்லையில்லா துன்பங்கள்,பெற்றிடுனும் ,சிலர் ஒதுங்கிட,தடுத்திட நிதி வழங்க மறுத்திட, என சோதனை வந்த பொழுதும் கண் துஞ்சாது பணி புரிந்து சோர்வில்லா இளைஞர் பட்டாளம் உழைத்திட வெற்றி பெற்ற ஒலிக்கதிர் பொன் விழா காலத்தை விஞ்சி நினைவுகள் நிற்க்கும்.
அணி பாரது, சங்க பேதம் மின்றி அனைவர்க்கும் பதாகை, விண்ணதிர சங்க கொடியேற்றம், தோழர் ஜெயபால்  குப்தா நினைவு அஞ்சலி,
தோழர் ஆர்.கே துவக்க உரை,மாநிலசெயலர் சிறிய,சீரிய உரை சிறப்புரை என தலைவர்களின் அணிவகுப்பு, சிறப்பு சேர்த்த அவர் தம் உரை, நிஜ நாடகம், கவிஅரங்கு எதிர் பார்ப்பை விஞ்சிய, வரவேற்புகுழு திணறும் அளவு தோழர்கள் பங்கேற்ப்பு, தோழர் தா.பாண்டியன் காலை முதல் கண்டு ரசித்து மாலை நிறைவு பேருரை நிகழ்த்திய பாங்கு என சிறப்புகளை பட்டியல் இட்டாலும்  நினைவை அகலாத கடலூர் ஒலிக்கதிர் பொன் விழா காலத்தை விஞ்சி நிற்கும்.
சின்னபையன் என எகடியம் செய்து ,விளித்தாலும் சின்னபையன் நான் அல்ல சீர்மிகும் ,விஸ்வரூபம் காட்டிய வாமனன், வாமனன் என நிரூபித்த எனது அன்புதோழன் ஸ்ரீதர் ,மற்றும் தோழர்களுக்கு நன்றி.









 


 
 


புதுவையில் இருந்து 8 தோழியர்கள் உட்பட்90 பேர் கலந்துகொண்டனர்.அனைவர்க்கும் நமது நன்றிகள்.