திங்கள், அக்டோபர் 10, 2016

ஆர்ப்பாட்டம்,-- 24/10/2016 தார்ணா

NATIONAL FROUM OF BSNL WORKERS PUDUCHERRY SSA
18/10/2016  ஆர்ப்பாட்டம், மாலை 0530 மணி
24/10/2016 தார்ணா காலை 1000 மணி முதல்
G.M.அலுவலகம் முன்
அனபார்ந்த தோழர்களே! தோழியர்களே !
நமது கூட்டணி சங்கங்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து தீர்வுக்காக போராட அறைக்கூவல் விடுத்துள்ளது.. அனைவரும் பங்கேற்று வெற்றிகரமாக்கிடுவோம்.
கோரிக்கைகள்
v  2015-16 க்கு புதிய போனஸ் திட்டம் வகுத்து போனஸ் வழங்குக !
v  3 வது ஊதியமாற்றக்குழு அமைத்திடுக !
v  NEPP  பதவிஊயர்வு பாதகங்களை  நீக்கு !
v  தேக்கநிலை பாதிப்பை நீக்கு !
v  நேரிடை ஊழியர்களின் ஓய்வூதியகொடை,, விடுப்பைகாசாக்குதல் ,குடும்பஓய்வூதியம், வழங்கு !
v  இலாக்கா தேர்வுகளுக்கு கல்வி தகுதி தளர்த்துக !
v  கட்டயா பணி நீக்க உத்திரவை ரத்து செய் !
v  தேர்ச்சிபெற்ற  RM ஊழியர்களை TM ஆக பதவி ஊயர்வுசெய் !
v  வணிக பகுதி மாற்றங்களை சங்கங்களுடன் கலந்து இறுதி செய் !
v  மருத்துவ திட்டத்தை மேம்பாடு செய் !
v  4 வது சனிக்கிழமை வங்கிபோல விடுமுரை வழங்கு !,

அனைவரும் வருக! போராட்டம் சிறக்க செய்க !!
தோழமையுடன் 
செல்வரங்கம் .மா.
மாவட்டசெயலர் 

FORUM NOTICEBONUS CIRCLE UNION CIRCULARDEMO ON 18/10/2016 POSTER


வியாழன், செப்டம்பர் 01, 2016

பணி நிறைவு பாராட்டு விழா

தோழர் செல்வரங்கம்,மாவட்டசெயலர்,புதுச்சேரி பணி நிறைவு பாராட்டு விழா 27/08/2016
 1974 மைசூரில் நடைபெற்ற சம்மேளனகூட்டத்தில்  மஸ்தூர்களை NFPTE இயக்கத்தில் இணைத்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இந்தியாவிலேயே கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தோழர் ஜெகன் தலைமையில்  மஸ்தூர் கிளை சங்கம் துவக்கப்பட்டது. அதன் முதல் கிளை செயலராக தோழர் M.செல்வரங்கம்தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் இன்று பணி நிறைவு வரை தொடர்ந்து சங்கப்பணியில் பணியாற்றிய தோழர் நிரந்தர ஊழியர்களின் செயலராக, மாவட்ட உதவி செயலராக புதுவையில் பல்வேறு தோழர்கள் மாவட்ட செயலர்கள் பணியாற்றிய காலத்திலேயே அவர்களுக்கு உறுதுணையாக புதுவையில் இயக்கத்தை கட்டியமைத்த தோழர்களில் முதன்மையானவர். சங்கத்தைத் தாண்டி மனித நேயத்தோடும் பல்வேறு தோழர்களுக்கு உதவி புரிந்த தோழர் செல்வரங்கம். இலாக்கப் பணியிலும் எந்த அதிகாரியும் குறை சொல்ல இயலாத அளவிற்கு செயல்பட்ட தோழர்.NFTE சங்கத்தின் புதுவை மாவட்ட செயலராக 2015-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு    திறம்பட பணியாற்றிவருகிறார்.
தோழர் செல்வரங்கம் மாவட்டசெயலர்,புதுச்சேரி பணி நிறைவு பாராட்டு விழா 27/08/2016 அன்று நடைபெற்றது.மாவட்டத்தலைவர் தோழர் தண்டபாணி தலைமையில் விழா நடைபெற்றது.இந்தியகம்யூனிசஸ்ட் தலைவர்கள்தோழர் தா.பாண்டியன், மூ.வீரபாண்டியன் கலந்து கொண்டு பாராட்டினர்.தோழர்கள் வி.எஸ்.அபிசேகம், மாநில செயலர், AITUC,பிரேம்ராஜ் IOBஅதிகாரிகள்சங்கம், மோகனசுந்தரம் இன்சுரன்ஸ் சங்கம் பன்னீர்செல்வம்,மாநிலத்த்லைவர் P4, புதுவை BSNL தோழமை தொழிற்சஙக மாவட்டசெயலர்கள் ,நமது மாநில சங்க தலைவர்கள் பட்டாபி,சேது S.S. கோபலகிருஸ்ணன்,தமிழ்மணி, செல்வம்,TMTCLU , மாநிலசெயலர், நடராஜன், மாநிலதலைவர்காமராஜ், கடலூர் ஸ்ரீதர், V.லோகநாதன்,V.இளங்கோவன், சென்னகெசவன்,தர்மபுரி மணி,,குடந்தை விஜய்,பாலமுருகன்,திருச்சிமனோகரன் ,மதுரை முருகேசன், ராம்சேகர்,குன்னூர் ராமசாமி,கோவை ராபர்ட்ஸ், உள்ளிட்ட மாநிலசங்கத்த்லைவர்கள்,திரளாக பங்கேற்று பாராட்டி சிறப்புசெய்தனர்.. புதுவைமாவட்ட தோழர்கள்,தோழியர்கள், அதிகாரிகள் ,உறவினர்கள் என பல நூறுக்கும் மேற்பட்டதோழர்கள்,தோழியர்கள் பங்கேற்று பாரட்டு தெரிவிதனர்.. சிறப்பான ஏற்பாடுகள்செய்யபட்டுஇருந்தன.பணிஓய்வு பெற்ற தோழர் செல்வரங்கத்தை சங்கம் பாராட்டுகிறது.


புதன், ஆகஸ்ட் 31, 2016

selvangam retirement

தோழர் செல்வரங்கம்,மாவட்டசெயலர்,புதுச்சேரி பணி நிறைவு பாராட்டு விழா


 27/08/2016செவ்வாய், ஆகஸ்ட் 30, 2016

தோழர் நம்பீசன் மறைவு


தோழர்  நம்பீசன்  மறைவு 
UPTW, NFPTE, கால முன்னோடி தலைவர் ஒன்றுபட்ட மெட்ராஸ் பகுதியின்   அகில இந்திய  தலைவர்,லைன் ஸ்டாப் பகுதியின் முதல் மாநில சங்க செயலர் 28/08/2016 அனறு  மறைந்தார்  அவருக்கு  நமது கோடி தாழ்த்தி  அஞ்சலி யை  உரித்தாக்குகின்றோம்